வாழ்க்கையே போர்களம்! வாழ்ந்து தான் பார்க்கனும்! போர்களம் மாறினும், போர்கள் தான் மாறுமோ???

Friday, May 7, 2010

சொல்லாமலே இருந்திருப்பேன் தெரிந்திருந்தால்உன் கைகோர்த்து நடந்த அந்த குளிர்ந்த இரவு

உன் மடி சாய்ந்து உறங்க ஏங்கிய அந்த நாட்கள்

உன்னை மட்டுமே நினைத்து தலையணயை கட்டி கழித்த அந்த இரவுகள்

உன்னுடன் மட்டுமே செல்ல பிடித்த தொலை தூர பயணங்கள்

உன் பிரிவை தாங்க முடியாமல் யாருமறியாமல் அழுத அந்த நிமிடங்கள்

உன்னை பேச வைப்பதற்காகவே
உருவாக்கிய செல்ல சண்டைகள்

இவை அனைத்தும் கிடைக்காமல் போகும் என்று தெரிந்திருந்தால் சொல்லாமலே
இருந்திருப்பேன் என் விருப்பத்தை..........

நினைவுகள் ஓர் பயணம்

அன்று ஒரு நாள் நான் கண்ட கனவில்

பேசி சிரித்து,
உன் தோள் சாய்ந்து நான் உறங்க
நான் உறங்கியாதாய்!
நீ வைத்த முத்தத்தில் மலர்ந்ததாய் நினைவு

உன் அழைப்பை மட்டுமே எதிர் பார்த்த நிமிடங்களில்
வந்த தோழியின் அழைப்பில்
காட்டிய கோபத்தில் உணர்ந்தாய் நினைவு

உன் நினைவில் கழித்த பயணங்களில்
தனியே சிரித்து அதை மறைக்க
தோழியிடம் சொன்ன பொய்களில் வளர்ந்தாய் நினைவு

அம்மாவிடம் ஆயிரம் காரணம் சொல்லி
அப்பா வருவதற்குள்
உன்னை பார்க்க வர முடியமால்
தவித்த அந்த நிமிடங்களில் உயிரானதாய் நினைவு

உறவாய்! உயிராய்! உன் கைபிடித்து நடந்த
நிமிடங்களில் உருவானதாய் நினைவு

இப்படி நினைவுகளை மட்டும் விட்டு
என்னைக் கொன்று சென்றவனே
நினைவிருக்கிறதா என்னை?

Thursday, April 8, 2010

இப்படியும் ஒரு ஆசை.....

என் குழந்தையை மட்டுமே
பார்க்க நினைப்பவர்கள் மத்தியில்
என்னை குழந்தையாய் பார்க்கும்
ஒருவன் வேண்டும்.....

என் உயிர் தோழியிடம்......மலரை போல உன் வாழ்நாளும் சிறிது என்பதாலே
மலர் என்று பெயர் வைத்தனர் உனக்கு................
சொல்லடி என் செல்லமே...........

எனது கிறுக்கல்கள்


சந்தேகம்


எலும்பில்லா நாக்கின் வழியாக


மனதை காயப்படுத்தும் ஆயுதம்......


கோவில் / தெய்வம்


கல் என்று தெரிந்தும்


கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் இடம்....
காதல்


கிடைத்தவர்களுக்கு அமிர்தம்


கிடைக்காதவர்களுக்கு விஷம்.....வேண்டுவது


கள்ளம் கபடம் இல்லா நல்ல


உள்ளம் வேண்டும்


அதில் நல்ல நட்பு எனும்


விதை விதைக்க வேண்டும்.....

Wednesday, April 7, 2010

பார்க்க மனமில்லை
உன்னுடன் நடந்து வந்த பாதையை

திரும்பி பார்க்க மறுகின்றதென் மனம்!

காரணம் !!!

அது பூக்களால் நிரப்ப பட்ட சோலைவன பாதையல்ல

கற்களும், முற்களும், கண்ணாடி துண்டுகளும் கொண்டு நிரப்ப பட்ட கறடு முரடான பாதை

weather counter