வாழ்க்கையே போர்களம்! வாழ்ந்து தான் பார்க்கனும்! போர்களம் மாறினும், போர்கள் தான் மாறுமோ???

Friday, August 12, 2011

எனக்கில்லையென்றாலும்


சில நேரங்களில்
அன்பாய், நேசமாய்

பல நேரங்களில்
மௌனமாய், கோபமாய்

பாசத்தையும் ஏக்கத்தையும்
ஒரு சேர தந்து

விட்டு கொடுப்பத்திலும் அன்பு
அதிகமாகுமென்றுணரத்தியதால்


உன்னவளாகவே உருவகப் படுத்தி கொள்கிறேன்
நீ
என்னவனில்லையென்று ஆன பின்பும்......

கருவிலேயே சிதைந்திருப்பேன் அம்மா!!!!!

அன்பாய் அணைத்து, ஆசையாய் தலைகோதி
அள்ளி முத்தமிட்டு

ஆதரவாய் தோழ் சாய்த்து

உன் மடியிலே தலை வைத்து
கதை பேசி சிரித்து

அண்ணனை சீண்டி
அப்பா பின் ஒழிந்து

உன் செல்ல மகளாய் வாழ முடியாதென்று
தெரிந்திருந்தால் !!!!

கருவிலேயே சிதைந்திருப்பேன்
அம்மா

Wednesday, July 6, 2011

உன் நினைவுகள்

உன்னை இந்த நொடியிலிருந்து மறக்க வேண்டும்
என்று நினைத்து கொண்டுதான்
கண் மூடி திறப்பேன் தினமும்,
ஆனால் ஏனோ,
ஆயிரம் கிளைகளாய் தலை தூக்கும்
உன் நினைவுகள்......

Saturday, March 26, 2011

உனக்காக
உன்னிடம் எனக்கும் பிடித்ததும்

உன்னை மட்டும் தான்

பிடிக்காததும்,

உன்னை மட்டும் தான்

எப்படி புரியவைப்பேன்

நான் வாழ்வதும் வாழபோவதும்

உனக்காக மட்டும் தான் என்று!!!

உணர்வுகள்


தனிமை சுமையில்லை
தனியாய் உணரும் வரை

காதல் சுமையில்லை
தோல்வியை தழுவும் வரை

பிரிவு பெரிதல்ல
நேசித்தவர்கள் பிரியும் வரை

நட்பு பெரிதல்ல
நண்பர்களை உணரும் வரை

weather counter