வாழ்க்கையே போர்களம்! வாழ்ந்து தான் பார்க்கனும்! போர்களம் மாறினும், போர்கள் தான் மாறுமோ???

Friday, August 12, 2011

எனக்கில்லையென்றாலும்


சில நேரங்களில்
அன்பாய், நேசமாய்

பல நேரங்களில்
மௌனமாய், கோபமாய்

பாசத்தையும் ஏக்கத்தையும்
ஒரு சேர தந்து

விட்டு கொடுப்பத்திலும் அன்பு
அதிகமாகுமென்றுணரத்தியதால்


உன்னவளாகவே உருவகப் படுத்தி கொள்கிறேன்
நீ
என்னவனில்லையென்று ஆன பின்பும்......

கருவிலேயே சிதைந்திருப்பேன் அம்மா!!!!!

அன்பாய் அணைத்து, ஆசையாய் தலைகோதி
அள்ளி முத்தமிட்டு

ஆதரவாய் தோழ் சாய்த்து

உன் மடியிலே தலை வைத்து
கதை பேசி சிரித்து

அண்ணனை சீண்டி
அப்பா பின் ஒழிந்து

உன் செல்ல மகளாய் வாழ முடியாதென்று
தெரிந்திருந்தால் !!!!

கருவிலேயே சிதைந்திருப்பேன்
அம்மா

weather counter