
உன் கைகோர்த்து நடந்த அந்த குளிர்ந்த இரவு
உன் மடி சாய்ந்து உறங்க ஏங்கிய அந்த நாட்கள்
உன்னை மட்டுமே நினைத்து தலையணயை கட்டி கழித்த அந்த இரவுகள்
உன்னுடன் மட்டுமே செல்ல பிடித்த தொலை தூர பயணங்கள்
உன் பிரிவை தாங்க முடியாமல் யாருமறியாமல் அழுத அந்த நிமிடங்கள்
உன்னை பேச வைப்பதற்காகவே
உருவாக்கிய செல்ல சண்டைகள்
இவை அனைத்தும் கிடைக்காமல் போகும் என்று தெரிந்திருந்தால் சொல்லாமலே
இருந்திருப்பேன் என் விருப்பத்தை..........
தங்களது கவிதையை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ReplyDeleteஅன்புடன்,
ஆசிரியர்,
தமிழ்குறிஞ்சி
மிக அழகாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்....
ReplyDeleteகவிதை நன்று.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி மது
ReplyDeleteநன்றி அண்ணாமலை
ReplyDelete